மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டமசோதா சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநர் 131 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவை திருப்பி அனுப்பி வைத்தார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதா இன்று மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்கவும்: ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பை மேற்கொண்டதாக கூறியுள்ளது.
https://twitter.com/rajbhavan_tn/status/1638874009843429377?s=46&t=4BWhMUhkSco5lz7mMT5Z5A
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடைச்சட்டம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஆளுநர் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட சிலருடன் சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும் அதன்பிறகு அவர் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.







