இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை
திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்துள்ளார்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீண்டும் மறுநாள் காலை பைக்கை எடுக்க வந்தபோது பைக் இல்லாததை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது பைக் திருடு போய்விட்டதாக கீழ்ப்பாக்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: ஆபாச வீடியோக்களை பகிர்ந்துகொள்ள 30 வாட்ஸ் அப் குழுக்கள் -விசாரணையில் வெளிவந்த பாதிரியார் பெனெடிக் ஆண்டோவின் ரகசியங்கள்
இதேபோன்று சென்னையில் பல்வேறு இடங்களில் பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கீழ்பாக்கம் உதவி ஆணையர் தனி படை
அமைத்து வழக்கு பதிவுகளை கடுமையான முறையில் விசாரிக்க தொடங்கியுள்ளார்
மேலும் இதேபோன்று விலை உயர்ந்த பைக்குகள் அதிவேகமாக செல்லும் பைக்குகள் திருடு போன வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவின் அடிப்படையில் ஓட்டேரியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மற்றும் சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டது
தெரிய வந்தது.
இவர்கள் இருவரையும் கீழ்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை
மேற்கொண்டதில் எட்டு இருசக்கர திருடியது தெரிய வந்தது. மேலும் அந்த எட்டு இரு
வாகனங்களை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் இந்த இருசக்கர வாகனங்களை திருடியது பற்றி விசாரணை மேற்கொண்டதில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி ரீல்ஸ் போடுவதற்காக திருடியது தெரிய வந்தது.
பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும் அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம்
ஆவதற்காக, அதி வேகமாக செல்லும் வாகனங்களை திருடி, சாகசம் செய்து வீடியோ
பதிவிட்டு வெளியிட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர் மேலும் பாலா மட்டும் சோமேஷிடம் திருட்டு வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வரும் நண்பர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல் துறையினர்
சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருசக்கர வாகன
திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் நண்பர்கள் ஐந்து பேரை போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.