இந்திய அணி தோல்விக்கு சூரியகுமார் யாதவ் தான் காரணம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 269 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 270 ரன்கள் இலக்கை கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இது குறித்து பரணி எனும் கிரிக்கெட் ரசிகர் தெரிவித்ததாவது..
ஆஸ்திரேலியா அணியினர் சிறப்பான முறையில் விளையாடி 269 ரன்களை குவித்தனர்
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் சரியாக விளையாட வில்லை. விராட் கோலி இறுதி கட்டத்தில் விக்கெட்டை இழந்ததால் தான் இந்தியா தோல்வி அடைந்தது
இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் போட்டியை சரியாக விளையாடினர். அதிக வருடங்கள் கழித்து இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை பார்க்க வந்ததில் இந்தியா தோல்வி அடைந்தது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது
இந்திய அணி வெற்றிபெறும் என நினைத்து வந்தோம் ஆனால் இந்திய அணி தோல்வி
அடைந்தது மிகவும் வருத்தமாக உள்ளது இந்திய அணி தோல்வி அடைந்தாலும் விராட் கோலி அரை சதம் அடித்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
270 ரன் என்பது ஒரு சாதரமான போட்டியை எதிர்கொள்ளும் முறைதான். விராட் கோலி விக்கட்டை இழந்ததால் தான் பின்னால் வந்த வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்
சேப்பாக்கத்தில் நான்கு வருடங்கள் கழித்து போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என நம்பி வந்தோம் ஆனால் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.
சீனிவாஸ் எனும் மாற்றுத்திறனாளி இளைஞர் தெரிவித்ததாவது..
அதிகமான எதிர்பார்ப்புகளுடன் இந்த போட்டியை பார்க்க வந்தேன். கோலி அரை சதம் அடித்தவுடன் இந்திய அணி வெற்றி பெறும் என நினைத்தேன் அவர் விக்கெட்டை இழந்து தான் மிகவும் வேதனை.
ஜடேஜா இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் நடக்கவில்லை. கோலியின் புகைப்படத்தை என் கையால் வரைந்து கோலிக்கு கொடுக்க நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை என வருத்தத்தோடு தெரிவித்தார்.








