தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடந்த டிசம்பர் 10 முதல் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் விருப்ப மனுக்கள் அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் தரப்பில் விருப்ப மனுக்கள் அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 31.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற (15.1.2026) ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிக்கப்பட்டுள்ளது.







