தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு.
இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா சைதாப்பேட்டையில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இணை வேந்தர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்கவில்லை.
இதற்கு முன் மதுரையில் நடந்த காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தார். தற்போது தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார்.
இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி அழைப்பிதழில் அவரது பெயர் இடம் பெற்று இருந்தும் அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







