கொடிவேரி அணைகட்டில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைகட்டில் இருந்து ஆயிரத்து 691 கன அடி உபரிநீர் வெளியேறி வருவதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கன மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொடிவேரி அணை வழியாக ஆயிரத்து 691 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா பயனிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவும், பரிசல் பயனம் மேற்கொள்ளவும் பொதுபணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.







