கேரளாவில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு; 2 மாவோயிஸ்டுகள் கைது

கேரளாவில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 மாவோயிஸ்டுகள் கைது செய்தனர்.  கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள தலபுழா பகுதியில் நேற்று இரவு கேரள மாநில சிறப்பு போலீஸ் படையினரும்,…

கேரளாவில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 மாவோயிஸ்டுகள் கைது செய்தனர். 

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள தலபுழா பகுதியில் நேற்று இரவு கேரள மாநில சிறப்பு போலீஸ் படையினரும், தண்டர்போல்ட் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது 5 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது உண்ணி மாயா மற்றும் சந்துரு ஆகிய 2 மாவோயிஸ்டுகளை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.