24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் உயிர் நீத்த நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;

அரசு நடத்திய ஒடுக்குமுறையால், காவல்துறையின் வெறியாட்டத்தால் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உரிமைக்காக போராடி உயிரிழந்தனர். உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதரம் இன்னுமும் மேம்படவில்லை. தமிழகம் முழுவதும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கேள்வி குறியாக தான் உள்ளது. அரசு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாயை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையிலும், நீலமலை தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அதற்கு தடையாணை பெற்றுள்ளனர். இந்த வழக்கை தமிழக அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மணிப்பூர் வன்முறை, திட்ட்முட்டு பாஜக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இது இனப்படுகொலைக்கு பாஜக தான் காரணம். இதற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுபேற்று பதவி விலக வேண்டும். பெண்கள் மானபங்க படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கை இல்லை. உலக அளவில் இந்தியா தலைகுனிந்து நிற்கும் நிலை மணிப்பூர் வன்முறையால் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் ப்ரேன் சிங்கை கைது செய்து குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் பங்கேற்பார்.

நாளைய தினம் இதே சம்பவத்தை கண்டித்து மதுரையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் அல்லது சிலை தவிர வேறு படங்கள் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைத்தவர், அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்பதன் காரணமாக அம்பேத்கர் படம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் சமூகப் பதற்றம், அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் என்.ஐ.ஏ சோதனை என்ற முறையை பாஜக கையாண்டு வருகிறது. இன்று கூட நெல்லையில் எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் என்ஐஏ சோதனையை நடத்தி அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். என்ஐஏ அமைப்பை ஏவி சோதனை என்ற பெயரால் பதற்றத்தை ஏற்படுத்துவதால் தமிழகம் பயங்கரவாதிகளுடன் இணக்கமாக இருப்பதைப் போல் காட்டுவதற்கே, பாஜக என்ஐஏ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கு விசிக கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy