தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டுக்கோட்டையை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீகாந்த் என்பவர் வீட்டில், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதில், கதவு திரைத் துணி தீ பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.







