அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்க, வரும் 14 ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இன்றி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார். அரசின் செயல்பாடுகளில், தங்களுக்குத் திருப்தி இல்லை என்று கூறிய ஜெயக்குமார், இரட்டை தலைவர்கள் வழிகாட்டுத்தலில், அதிமுக எழுச்சியுடன் சென்று கொண்டிருப்பதாகவும், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில், அதிமுக செயல்படும் என்று தெரிவித்தார்.







