கொரானாவை ஒழிக்க தமிழ்நாடு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரனாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசிதான் என்றார். பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் தடுப்பூசி செலுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திரைத்துறையினர் பல கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.







