பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல், பணியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டதால், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், திருவொற்றியூர் பணிமனையைச் சார்ந்த நடத்துநர் K.சிவசுதன் பணி எண்.C56594 அவர்கள் கடந்த 19.01.2023 அன்று தடம் எண்.28/A, பேருந்து எண். TVI-1912-ல் பணிபுரிந்த போது சென்ட்ரல் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல், தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பாக செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து, நடத்துநர் K.சிவசுதன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட மேலாண் இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பொதுமக்களுக்கு எந்த குறைவின்றி சேவை ஆற்றும் பணியில் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. எனவே, பொது மக்களிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும், பேசும்போது கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். கவனக்குறைவாக செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் அவர்கள் தெரிவித்துள்ளார்.