தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில,
பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
120 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாடிண்டில் 14.89 லட்சம் மெட்ரின் டன், 5 ஆண்டுகளில் 2.15 கோடி மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட்டுறவு உணவு நுகர்வோர் துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
45 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,359 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மீனவர்களின் நலனுக்கும் நல வாழ்வுக்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுக பணிகள் நடைபெற்று வருகின்றன. மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் தொகை ரூ.8000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.







