திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரவுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது, இதனால் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட தேசியக் கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட நேற்று பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகம் வந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், கேரளாவில் மும்புரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3-ம் தேதி வருகிறார். தேர்தல் பரப்புரைக்காக வரும் இவர் நாகர்கோவிலில் நடைபெறவுள்ள பரப்புரை கூட்டத்தில் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







