“நாராயணசாமி ஆட்சியில் ஊழல்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தொழில், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றின் மையமாக புதுச்சேரி மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக…

தொழில், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றின் மையமாக புதுச்சேரி மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், பிரதமர் மோடி நேற்றைய தினம் கேரளா, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அதில், புதுச்சேரியில் ஒரு ஈர்ப்பு சக்தி இருப்பதாகவும், அதுவே தன்னை மீண்டும் மீண்டும் புதுச்சேரிக்கு வர துண்டுவதாகவும் குறிப்பிட்டார். புதுச்சேரியில், முன்னாள் முதலமைச்சருக்கே தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை என கூறிய அவர், அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான தேர்தல் என்றார். நாராயணசாமியின் ஆட்சியில் ஊழல் மட்டுமே நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், புதுச்சேரி, தொழில், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றின் மையமாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.