பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : மகேந்திரன்

பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில், வீடு, வீடாக சென்று மக்கள் நீதி…

பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில், வீடு, வீடாக சென்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். மக்களுக்கான நல்லாட்சியும், வெளிப்படையான நிர்வாகமும் அமைந்திட, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிக்குமாறு மகேந்திரன் கேட்டுக் கொண்டார்.

அப்போது, பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் அவதிப்படுவதாக, பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தலில் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை, தொகுதி மக்களை சந்திப்பதாக கூறிய மகேந்திரன், பட்டா இல்லாத மக்களுக்கு, விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.