முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் 2 பேர் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர். அபோதாபாத் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை போக்குவரத்து முடங்கியது.

இதையும் படியுங்கள் : ’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் – ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட பகுதிகளான டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. வீடுகளில் உள்ள பொருட்கள் ஆடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். டெல்லியின் ஜாமியா நகர், லால்பாத்நகர், கான் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு காரணமாக சில கட்டங்களில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்கள், வீடுகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் உடனடியாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்

G SaravanaKumar

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரவுண்ட் அப்

Niruban Chakkaaravarthi

உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்: 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Jeba Arul Robinson