WPL 2023: பெங்களூருவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. மகளிர் ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

126 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் – யாஸ்திகா பாட்டியா ஜோடி 53 ரன்கள் குவித்தது. ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா ஆட்டமிழந்த நிலையில் அமெலியா கெர் களமிறங்கினர். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் அமெலியா கெர் மற்றும் அமன்ஜோத் கவுர் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். 16.3 ஓவர்களில் 129 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட்டை இழந்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.