பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன் படி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் ரொக்கப்பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல். உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட மாடல் அரசு. பொங்கலோ பொங்கல்” என்று தெரிவித்துள்ளார்.








