முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

தொடரை வெல்லப்போவது யார்? – இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒருநாள் தொடரை எந்த அணி வெல்லும் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இன்றைய போட்டியில் மிகச் சிறந்த வீரர்கள் அடங்கிய அணி களம் இறக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் டிக்கெட் விற்பனை விரைவாக நிறைவு பெற்றது. இருப்பினும் இந்திய வீரர்களை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இன்றைய போட்டியையொட்டி 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

GeM மூலம் ரூ.1.06 கோடி கொள்முதல்: அனுராக் தாகூர்

Mohan Dass

மாமனிதன் வைகோ ஆவணப்படம் – செப்.11இல் வெளியீடு

Web Editor

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

G SaravanaKumar