தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தமிழகத்தில் காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் மீது ஒடுக்குமுறையை கையாள்வதும், அதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்துவது என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் விசிகவினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இப்படி திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து காவல்துறையினர், ஒருதலைப்பட்சமாக விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா