நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதற்கு இதுதான் காரணம் ..! – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்

சமீபகாலமாக  எதிர்மறையான கதாபாத்திரத்தில்  அதிகமாக  நடிப்பதற்கான காரணத்தை நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது.. நான் 40 ஆண்டுகள் இந்த…

சமீபகாலமாக  எதிர்மறையான கதாபாத்திரத்தில்  அதிகமாக  நடிப்பதற்கான காரணத்தை நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது..

நான் 40 ஆண்டுகள் இந்த கலை உலகத்தில் பயணித்து வருகிறேன். தற்போது எதிர்மறையான கதாபாத்திரத்தில்  அதிகமாக நடித்தாலும் நம் முகம் தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக நடிக்கிறேன்.  புதிய தலைமுறையினர் என் படமே பார்க்காம இருந்திருக்கலாம். தற்போது என் படம்  பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அவர்களை என் படம்  சென்றடைய வேண்டும், அவர்கள் என் திரைப்படத்தை பற்றி பேச வேண்டும் என்ற அடிப்படையில்  நல்ல படங்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன்.

பொன்னியின் செல்வன்  ப்ரொமோஷன் நிகழ்ச்சியில்  என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய மகனை பார்ப்பதற்காக நான் சிங்கப்பூர் சென்றதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  பொன்னியன் செல்வன் படம் தற்போது வெற்றி படமாக அமைந்திருக்கிறது.

பொன்னியின் செல்வன், வாரிசு உள்ளிட்ட படங்கள் என்னுடைய படங்களை பார்க்காமல் இருக்கும் தலைமுறையினருக்கு என்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. பொன்னின் செல்வன் படத்திற்கு பின் எனக்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளதாக சிலர் தெரிவித்தனர்.அதற்கு காரணம் மணிரத்னம்தான்.அதேபோல வாரிசு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பளிப்பதற்கு நடிகர்  விஜய்க்கும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒரு தந்தைக்கும் மகனுக்குமான பாசத்தை வெளிப்படுத்தும் படமாக இந்த படம் அமைந்தது . இந்தப் படத்தை பார்த்து இயக்குனர் பாரதிராஜா வாழ்த்துக்களை தெரிவித்தார்

சூரியவம்சம் பாகம் 2 தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி ஆறு மாதம் ஆகியுள்ளது. அதற்கான கதை உறுதி செய்தால் சூரியவம்சம் பாகம் 2 தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கும். பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நான் இன்னும் பார்க்கவில்லை என்னுடைய மனைவி என்னுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எனவே மனைவி மகள்களுடன் சென்று பார்க்க போகிறேன்.

தற்போதைய தலைமுறையினர் புத்தகம் அதிகமாக வாசிப்பதில்லை. பொன்னியின் செல்வன் வரலாற்றையும்  சேர்த்து fiction  கதையாக இந்தப் படம்  எடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 3 எடுத்தாலும் எனக்கு நடிக்க விருப்பம்.  வயது ஒரு நம்பர் மட்டுமே. என்னுள் உடற்பயிற்சி என்பது ஊறியிருக்கிறது .உள்ளத்தாலும் உடலாலும் நான் உறுதியாக இருக்கிறேன்

36 மணி நேரத்திற்கும் மேலாக  தூங்காமல் தொடர்ந்து  உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் எனது வெற்றிக்கான காரணம். என்னுடைய 100 வயதிலும் கண்டிப்பாக நான் நடிப்பேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் நல்லது சங்கத்திற்காக பணி புரிபவர்கள் வெற்றி பெற வேண்டும்.

எனது அரசியல் பயணம் கண்டிப்பாக தொடரும். வரும்  2026 தேர்தலில் என்னுடைய அரசியல் பயணம் தொடர்பான வியூகம் அறிவிக்கப்படும்.

போதை பொருட்களால் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. உலகம் முழுவதும் போதைப்பொருள் பரவல் அதிகமாகிவிட்டது அதனை தடுப்பதற்கு மட்டுமே திரைப் படங்களில் காட்சியாக அமையப்படுகிறது. மல்யுத்தம் வீரர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு ஏற்பட்டால் அது விசாரித்து புகாரில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து ஆக தான் வேண்டும். தமிழ்நாட்டில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று கேள்விப்பட்டேன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.