முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ராகுல் காந்தி

இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ரஃபேல் விசாரணையை தடுப்பதற்காகவே செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவின் செல்போன் ஒட்டுக்கேட்கபட்டது ஏன் என கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்

Ezhilarasan

யாருடைய வருகையும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது- அமைச்சர் பாண்டியராஜன்!

Jayapriya

வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

Gayathri Venkatesan