முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்: அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் எம்பி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவின் முக்கியமான 40 நபர்களின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூடத்தொடரில் எதிர்க்கட்சிகள், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனையடுத்து ஏற்பட்ட அமளியில் மாநிலங்களவை மத்தியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தும் அமளி குறையாததால் நாள் முழுதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்களவை மாலை நான்கு மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அமளி குறையாததால் நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 12 மாநிலங்களில் 4 மொழிகளில் நாளிதழ்களை நடத்தும் டைனிக் பாஸ்கர் ஊடக நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். இந்த பிரச்னை மற்றும், பெகாசஸ் விகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளக்கம் கோரினர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை விரைவில் கூறி முடிக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

ரெய்டு நடத்தப்பட்ட ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இடம்

இதன் காரணமாக ஆத்திரமடைந்த திரிணாமுல் எம்.பி சாந்தனு சென் அமைச்சர் கையிலிருந்த பெகாசஸ் அறிக்கையை பறித்து கிழித்து எறிந்துள்ளார். இந்த சம்பவம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:

Related posts

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

Jayapriya

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

Jeba Arul Robinson

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Gayathri Venkatesan