நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. உலக…

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

உலக தலைவர்கள் உட்பட 50 ஆயிரத்திற்கும் அதன் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேர் பெயர் அப்பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் திமுக சார்பாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.