முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்துறையை ஒட்டுமொத்தமாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் சட்டம் என்று குற்றம் சாட்டி இந்திய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விலை பொருட்களுக்கு கிடைக்கும் அடிப்படை விலை பாதிப்பு என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதைதொடர்ந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி டெல்லியில் போரட்டத்தை தொடங்கினர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் டெல்லிக்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் நுழையாமல் இருக்க குழிகள் தோண்டுவது போன்ற இடையூறுகள் ஏற்பட்டாலும், அவை எல்லாவற்றையும் கடந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கே தங்கி, குளித்து, சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் தொடங்கியதால், போரட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நேற்று நாடாளுமன்றம் அருகே உள்ள ஜந்தர் மந்தரில் காவல்துறையினரின் அனுமதியுடன் போராட்டத்தை தொடங்கினர். ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போராட்டத்தில் தினமும் 200 பேர் கலந்து கொள்ள போராட்டக்குழு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 5 வரை போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு

Gayathri Venkatesan

3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

“காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது” – கபில் சிபல் விமர்சனம்

Saravana Kumar