முதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!

வீட்டில் தனியாக இருந்த முதியவரை மர்ம நபர்கள் சேர்ந்து முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஜெயச்சந்திரன்.…

வீட்டில் தனியாக இருந்த முதியவரை மர்ம நபர்கள் சேர்ந்து முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஜெயச்சந்திரன். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெயசந்திரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த சூழலில்தான் வீட்டில் தனியாக வசித்து வந்த ஜெயசந்திரன் முகம் சிதைந்து மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தன்று வெகு நேரமாக ஜெயசந்திரன் வீட்டிற்குள் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெயசந்திரன் தலை நசுங்கி, முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி. தலைமையிலான போலிசார் மோப்ப நாய் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். ஜெயசந்திரனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் மகன் ராஜ்குமார் திட்டம்போட்டு ஜெயசந்திரனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ராஜ்குமாரையும் அவரது நண்பன் மணிகண்டனையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிக்குள் நடந்த இக்கொலை சம்பவத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உரைந்து போயியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.