டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய, சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி டி.ஜி.பி. திரிபாதி உத்தவிட்டார். இந்நிலையில், சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் டேராடூன் விரைந்தனர்.
இதனை முன்கூட்டியே அறிந்த சிவசங்கர் பாபா, மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார். இந்நிலையில் தற்போது டெல்லியில் வைத்து காவல்துறையினற் அவரை கைது செய்துள்ளனர்.







