தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வெற்றி பெற்றது.
ஆனால் அதே நேரத்தில் 45 ஆண்டு காலம் சிபிஐ(எம்)-மின் கோட்டையாக திகழ்ந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து 101 வார்டு உறுப்பினர்களை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ரஜேஷ் 51 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார்.
இடது சாரிகளின் வேட்பாளர் 29 வாக்குகளையும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 19 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.







