பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது, வெளிநாட்டில் உள்ள இரண்டு விளையாட்டு வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர்.
தடகளப் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்று வந்த விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது வரை ஆறு வீராங்கனைகள் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கும் நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆறு பேரில் இரண்டு வீராங்கனைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும் நாகராஜன் கைது குறித்து கேள்விப்பட்ட அவர்கள் இருவரும் எழுத்துபூர்வமாக நாகராஜன் மீது புகார் அளித்துள்ளனர். நாகராஜனிடம் பயிற்சி பெறும்போது தேசிய அளவில் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்றால் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வீராங்கனைகள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.







