சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பேருந்து நிலைய சாலையோரம் இறந்து கிடக்கும் முதியவரால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல் துறைக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனடையடுத்து சம்பவ இடத்திற்கு வம்த காவல்துறையினர் பூட்டியிருக்கும் கடை வாசலில் சுமார் 60 வயதுள்ள முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தை பார்த்து 108 அவசர ஊர்தியை வரவழைத்தனர்.
இதன் பின்னர் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவலர்கள் அவரின் சட்டை பையில் சோதனை செய்தனர். அந்த முதியவரின் சட்டைப்பையில் தஞ்சாவூரில் இருந்து நேற்று இரவு பேருந்தில் பயணம் செய்த பயணச் சீட்டு இருந்துள்ளது.
மேலும் அவர் எழுதிய கடிதம் ஒன்றும் அவரது சட்டைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் ”சட்ட மன்ற உறுப்பினருக்கு எழுதிக் கொள்வது எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என்னைப் பற்றி விளம்பரப்படுத்தாமல் அடக்கம் செய்யுங்கள்” என எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் மாறன் என்ற கையெமுத்தும் இருந்தது.
இதனையடுத்து கும்பகோணம் மேற்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எம்எல்ஏ வுக்கு கடிதம் எழுதி வைத்து முதியவர் மரணம் அடைந்துள்ள நிகழ்வு கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
– யாழன்