முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கிறார் கூகுள் CEO சுந்தர் பிச்சை; தொடரும் கூகுளின் நிதி நெருக்கடி

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாகப் பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.சமீபகாலமாக உலக அளவில் செயல்படக்கூடிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்தடுத்து வேலை இழப்பை அறிவித்து பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மூத்த நிர்வாகிகளின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊழியர்களுடனான டவுன் ஹால் கூட்டத்தில், சுந்தர் பிச்சை சமீபத்தில், மூத்த துணைத் தலைவர் மட்டத்திற்கு மேல் உள்ள அனைத்துப் பதவிகளில் உள்ளவர்களுக்கும், அவர்களின் வருடாந்திர போனஸ் தொகை குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, பிச்சையின் ஆண்டு சம்பளம் $2 மில்லியன். இந்நிலையில் IIFL Hurun India Rich List 2022 இன் படி, கூகுள் CEOவின் நிகர மதிப்பு 20 சதவீதம் சரிந்து ரூ.5,300 கோடியாக உள்ளது.

ஜனவரி 20 அன்று, உலகளாவிய மந்தநிலை பற்றிய அச்சத்தின் மத்தியில் செயல்பாட்டுச் செலவைக் குறைக்க 12,000 ஊழியர்களைப் பிச்சை பணிநீக்கம் செய்தார். அப்போது அவர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஏறக்குறைய 25 வருட பழமையான நிறுவனம் என்பதால், கூகுள் கடினமான பொருளாதார சுழற்சிகளைக் கடக்க வேண்டியுள்ளது. “எங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்துவதற்கும், எங்கள் செலவுத் தளத்தை மறுசீரமைப்பதற்கும், நமது திறமை மற்றும் மூலதனத்தை நமது உயர்ந்த முன்னுரிமைகளுக்கு வழிநடத்துவதற்கு இவை முக்கியமான தருணங்கள்” என்று அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிச்சையின் நடவடிக்கை கடுமையான ஆய்வுக்கு உட்பட்டது. சமூக ஊடகங்களில் பலர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாகச் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். சமீபத்தில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் 40 சதவீத ஊதியத்தைக் குறைப்பதாக அறிவித்ததையும் சிலர் உதாரணம் காட்டியுள்ளனர்.

எஸ்இசியிடம் தாக்கல் செய்ததில், ஆப்பிள் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்த ஆண்டு ஊதிய குறைப்பை மொத்த இழப்பீடாக $49 மில்லியனாகப் பெறுவார் என்று கூறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D

கேப்டன் வருண் சிங், மாணவர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் வைரல்

EZHILARASAN D

சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy