58 நிமிடங்களில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முடித்த நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை 58 நிமிடங்களில் தாக்கல் செய்து தனது உரையை முடித்தார்.  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை 58 நிமிடங்களில் தாக்கல் செய்து தனது உரையை முடித்தார். 

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2024-25-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.  பட்ஜெட் உரையில் பல அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.  மேலும் 58 நிமிடங்களிலேயே அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை முடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.