நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு சர்ச்சைக்குறியதாக இருந்து வருகிறது. இதற்கிடையில் 2024ம் ஆண்டு ரூ. 87 கோடி கடன் வழக்கில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு செயற்கை நுண்ணறிவு மூலமானது என்ற புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, அலோக் ஆர்தே ஆகியோர் அமர்வு விசாரித்ததது. இந்த அமர்வு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் சட்ட ரீதியாக தீர்ப்பளிக்கும் நடைமுறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்றும் இது ஆபத்தான போக்கு என்றும் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து அதில், அதிகரிக்கும் பணிச்சுமை காரணமாக செயற்கை நுண்ணறிவை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனை ஒழுங்குபடுத்தாவிட்டால் அறிவு சார் பணிகளில் ஊடுருவி அதனை சார்ந்தே செயல்படும் நிலைக்கு தள்ளிவிடும் ஆபத்து உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும், நீதிமன்றங்களில் ஏஐ-யை பயன்படுத்தும் விவகாரத்தை குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




