ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி

‘தமிழ்நாடு’ என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்பட்ட கருத்து, அது ஒன்றும் புதியதல்ல என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்கல்வி துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை…

‘தமிழ்நாடு’ என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்பட்ட கருத்து, அது ஒன்றும் புதியதல்ல என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்கல்வி துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,”இந்தியாவின் அரசியலமைப்பில் தமிழ்நாடு, தமிழகம் ஆகிய இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தின் போதே கூட்டாட்சியா? அல்லது ஒற்றை ஆட்சியா? எப்படி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டபோது அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்று கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் தான் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கூறுகிறோம். ஸ்டேட் என்றால் நாடு, யூனியன் என்றால் ஒன்றியம். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு” என்று கூறுவதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதனை தொடர்ந்து பேசிய அவர், ”அரசியலமைப்பின் படி செயல்படுகிற ஒரு முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் என்பதில் எந்த வேறுபட்ட கருத்துமில்லை.  ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை அவர் பல்வேறு நிகழ்வுகளில் இது போன்று பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், “மஹாராஷ்டிராவில் ’ராஷ்டிரா’ என்றால் ’நாடு’ என்று அர்த்தம். ஏதோ ஒரு எண்ணத்திற்காக அவர் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும். ’ஜனகனமன..’ என்ற பாடலிலேயே `திராவிடம்’ என்ற சொல் வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன  பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும்” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.