ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் சென்னை – லக்னோ அணிகள் மோதின. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19. 2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணியின் அதிகபட்சமான உர்வில் பட்டேல் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வார் 28 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார்.
லக்னோ அணி சார்பில் சர்பராஸ் அகமது மற்றும் டிக்வேஷ் ராதி ஆக்யோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.







