பணி நீக்க எதிரொலி; ஒரே நாளில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி இழப்பு

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும்…

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கின் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது. வணிக இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை மிகப்பெரிய பணிநீக்க அறிப்பை அறிவித்தது. இதையடுத்து 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது.

இந்த ஆண்டில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் என்பதால் அதனை கருத்தி கொண்டு பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்தது. இந்தியாவை சேர்ந்தவர்களும் இந்த பணிநீக்கம் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.சியாட்டலை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும். உலகம் முழுவதிலும் இந்நிறுவனத்தில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் பணிநீக்கம் செய்யப்படுவது ஒரு பகுதி தான். இதில்அமேசான் பிரஷ் மற்றும் அமேசான் கோ ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டதன் எதிரொலியாக அமேசான் நிறுவனத்துக்கு ஒரே நாளில் 5.33 ஆயிரம் கோடி (675 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில், 6வது இடத்தில் இருந்த அவரின் சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்துக்கு 834 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.