முக்கியச் செய்திகள் கொரோனா

செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றி வந்த மகாராணிக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கருப்பட்டி பகுதியை சேர்ந்த ரகுராஜா. இவருடைய மனைவி மகாராணி,இவருக்கு வயது 34. இவர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார், கொரோனா முதல் அலையில் இருந்து கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார் செவிலியர் மகாராணி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த 6 ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த செவிலியர் மகாராணிக்கு சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் இன்று மாலை உயிரிழந்தார், கடந்த 2011ம் ஆண்டு செவிலியரான மகாராணி திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்துள்ளார், மேலும் அரசு கொரோனா மருத்துவமனையில் 6 வாரங்களுக்கும் மேல் பணி செய்துள்ளார்,செவிலியர் மகாராணியின் பிரிவால் அரசு இராஜாஜி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் வருத்தமடைந்துள்ளனர்,

மேலும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30-ஆம் தேதி பணியாற்றிய தூய்மைப் பணியாளர் மரிய ராணி என்பவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் அடுத்தடுத்து ஊழியர்கள் உயிரிழக்கும் சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கர்ப்பிணி மருத்துவர் மதுரையில் கொரானாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழந்திருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக அழைப்பு

Halley Karthik

காமன்வெல்த் போட்டி; தீவிர பயிற்சியில் மல்யுத்த வீரர்கள்

G SaravanaKumar