முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன்!

தேனி மாவட்டம்,கூடலூரில் மின்னல் தாக்கி தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் 12வது வார்டை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் பாலபிரகதீஸ். இவர் தனது தந்தையுடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சாரல் மழையுடன் பலத்த மின்னல் மற்றும் இடி இடித்ததாக கூறப்படுகிறது.

இதில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் பாலபிரகதீஸ் அலறியபடி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம், சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாலபிரகதீஸை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்

Ezhilarasan

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் கர்ணன்!

Niruban Chakkaaravarthi

’ஆச்சார்யா’வுக்கு பிறகு ’லூசிஃபர்’ ரீமேக் தொடங்கும்: படக்குழு தகவல்!

Halley karthi