“டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்

தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும்…

தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், ஒன்றிய அரசு விரைந்து செயல்பட்டு, தடுப்பூசிகளை அதிக மக்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், காங்கிரஸ் கட்சி வரவேற்கும் எனக் கருத்து தெரிவித்த அவர், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பகுதிகளில், டாஸ்மாக் கடைகளை திறப்பதால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்பு இல்லை, எனவும் திருநாவுக்கரசர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.