அரசியலில் நுழைய தயார் – வர வேண்டுமா..? வேண்டாமா..? – மக்களிடம் கருத்து கேட்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்…!

நடிகர் ராகவா லாரன்ஸ் தான் அரசியலில் நுழைய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு நுழைவதாகவும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் அரசியலில் நுழைய உள்ளதாக தெரிவித்த அவர் , அது பற்றி மக்கள் தங்கள் கருத்துகளை கூறுமாறும் கேட்டுள்ளார்.

அந்த வீடியோவுடனான பதிவில் அவர் “எதையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை உண்மையாகச் செய்யுங்கள். இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துப் பகுதியில் பகிரவும். நீங்கள் “வேண்டாம்” என்று சொன்னால், நான் அரசியலில் நுழைய மாட்டேன், சமூகத்திற்கான எனது தன்னலமற்ற சேவையைத் தொடர்வேன். ஆனால் நீங்கள் “ஆம்” என்று சொன்னால், நான் அரசியலில் நுழையத் தயார். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன், எப்போது, ​​யாருடன் இந்தப் பயணத்தைத் தொடங்க உள்ளேன் என்பதை நான் வெளிப்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.