முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, யானைகளின் மாதிரிகள், கடந்த 8 ஆம் தேதி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக, உத்தரப் பிரதேசத்தில உள்ள கால்நடை மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவுகளில் முதுமலையில் உள்ள 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், முகாமில் உள்ள யானைகளுக்கு, சமூக இடைவெளி விட்டு உணவு கொடுக்கப்படும் என்றும், யானைகள் தனித்தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு இனிவரும் நாட்களில் பராமரிக்கப்படும் எனவும் முதுமலை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.