முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!

மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் என கூறி மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் காந்தி சிலை அருகே இருந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்சின் சிலையும் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களே சிலையை மூடிய துணியை அகற்றியுள்ளனர். ஆனால் மகாத்மா காந்தியின் சிலையில் உள்ள துணியை அகற்றாமல் மூடப்பட்டருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

இந்தியில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Gayathri Venkatesan

ஜொமோட்டா ஊழியரை தாக்கிய பெண் மீது வழக்கு பதிவு

Jeba

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை

Karthick