திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரப்புரையில் முழு வீச்சில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து வருகிறது. இன்று மற்றும் 12ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரும் 12, 13ஆம் தேதிகளில் சேலம், கரூர் மாவட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 14ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தீவிர பரப்புரையை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







