முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான அபிஷேக், நான்கு கிலோ வெள்ளி கொலுசுகளை பாலிஷ் போடுவதற்காக, காரில் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது, சீர்காழி புறவழிச் சாலையில், சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லாததால, அபிஷேக்கின் காரில் இருந்த நான்கு கிலோ வெள்ளி கொலுசுகளையும், 90 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகம் தாசில்தாருமான ஹரிதரனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கரூர் அருகே, வதியம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த சுகாதாரன் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரியில் எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement:

Related posts

“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

Jeba

”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

Jayapriya

ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

எல்.ரேணுகாதேவி