நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை வேகம் மாற்றத்தின் காரணமாக கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் முற்பகல் இருந்த வெயிலின் தாக்கம் பிற்பகலில் சற்று குறைய துவங்கியது. இதனை அடுத்து, ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது .
இந்த கனமழையினால், தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட படி சென்றதுடன், வாகனங்கள் சாலையில் ஓடி வந்த மழை நீர் கிடையே தண்ணீரை பீச்சி அடித்து சீறிப்பாய்ந்தன. மேலும் இந்த மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கு. பாலமுருகன்






