வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க்கபந்து என்பரவது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமல பூ பூத்துள்ளது. இதனை காண அக்கம்பக்கத்தினர் குவிந்துள்ளனர்.
பிரம்ம கமல பூ.பெயரை போலவே பூவும் அதிசயமான ஒன்றுதான்,ஆம் இந்த மலர் தமிழ்நாட்டில் மிக அபூர்வமாக ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.இமயமலை உள்ளிட்ட குளிர்ப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் இந்த பூவானது குளிர்காலங்களில் நள்ளிரவில் பூத்து ஒரு சில மணி நேரங்களில் உதிர்ந்து போகும்.
இந்த அதிசய பூவானது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வசித்து வரும் மார்க்கப்பந்து என்பவரது வீட்டில் நேற்றிரவில் பூத்தது.இதனை கண்ட வீட்டுகாரர்கள் சிறப்பு பூஜைகள் செய்து பூவை வழிபாடு செய்தனர்.மேலும் இந்த பூவை காண அக்கம்பக்கதினர் குவிந்தனர்.
வேந்தன்







