முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!

டெல்லியில் முக கவசம் எங்கே எனக் கேட்ட வங்கி காவலாளியை, வாடிக்கையாளர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் சத்தார்பூரில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் சஞ்சு என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைப்…

டெல்லியில் முக கவசம் எங்கே எனக் கேட்ட வங்கி காவலாளியை, வாடிக்கையாளர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
டெல்லியில் சத்தார்பூரில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் சஞ்சு என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைப் பார்த்த வங்கி காவலாளி, முகக் கவசம் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த வாடிக்கையாளர் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும், அந்த வாடிக்கையாளர் தொடர்ந்து தாக்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் வங்கி ஊழியர்களும் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
எனினும், ஆத்திரம் தணியாத அந்த வாடிக்கையாளர், தமது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். இதன் பின் அங்கே வந்த சஞ்சுவின் நண்பர்களும் அந்த காவலாளியைத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாடிக்கையாளரை கைது செய்து மைதான் கர்ஹி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்களும் கூடிய விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.