புத்தாண்டில் இரவு லாக்டவுன்!

சென்னையில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த தடைகளை தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று அறிக்கை விடுத்ததையடுத்து, தற்போது சென்னை…

சென்னையில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த தடைகளை தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று அறிக்கை விடுத்ததையடுத்து, தற்போது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்.
சென்னை கடற்கரைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது, பைக் ரேஸில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நேரத்தில், அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், 31ஆம் தேதி இரவு 12 மணிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது பயணத்தை முடித்துக் கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். விதிகளை மீறுவார்களுக்குக் கடுமையான தண்டனைகள் இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.