மதுவில் விஷம்; 2 முதியவர்கள் மரணம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, மதுவில் விஷம் கலந்து முதியவர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாராபுரத்தைச் சேர்ந்த முதியவர் தட்சிணாமூர்த்தி. இவரும்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, மதுவில் விஷம் கலந்து முதியவர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாராபுரத்தைச் சேர்ந்த முதியவர் தட்சிணாமூர்த்தி. இவரும் அவரது உறவினரான சங்ககிரி குப்பனூரைச் சேர்ந்த ராமனும், துக்க நிகழ்ச்சிக்காக, கே.மோரூருக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் மது அருந்திய இருவரும், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இருவரும் அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடக்கினர். அதில் முதியவர் தட்சிணாமூர்த்தியின் சொத்தை அபகரிப்பதற்காக, அவரது அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதும், இதனையறியாமல் அவருடன் சேர்ந்து ராமனும் மது அருந்தி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, முதியவர்களை கொலை செய்த குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.